கடலில் மிதந்து வந்த மர்ம பலூன்கள் வெடித்ததால் தூத்துக்குடி மீனவர் உடல் கருகியது. இதுகுறித்து, தூத்துக்குடி கடலோர காவல்படை போலீஸார் கூறுகையில், தூத்துக்குடி வேம்பார் பகுதியை சேர்ந்த மீனவர் கிளிண்டன். இவர், நாட்டுப்படகு ஒன்றில் மீன் பிடிக்க சக மீனவர்களுடன் நேற்று கடலுக்குச் சென்றார். அப்போது, 20 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடிக்க சென்ற போது, கடலில் பலூன்கள் மிதந்து வந்ததைக் கண்டுள்ளனர்.
அதை பார்த்ததும் குஷியான மீனவர் கிளிண்டன், அதில் குதித்து விளையாடியுள்ளார். ஆனால், எதிர்பாரதவிதமாக அந்த பலூன் வெடிக்கவே, அதில் இருந்த திரவம் சிதறியது. அந்த திரவம், கிளிண்டனின் உடலில் கொட்டியுள்ளது. இதில், அவரது உடல் வெந்து போய் கருகியது. இதனையடுத்து, அவசர அவசரமாக கரை திரும்பிய மீனவர்கள், கிளிண்டனை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.