குமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் வீடுகளில் புகுந்த கடல் நீர்

Forums Communities Fishermen குமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் வீடுகளில் புகுந்த கடல் நீர்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8569
    Inmathi Staff
    Moderator

    பொதுவாக, குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் பருவ மழை பெய்யும். அந்த சமயத்தில் பலத்த காற்று வீசுவதுடன் கடலும் சீற்றமாக இருக்கும். அந்த வகையில் கடல் தற்போது தொடர்ந்து சீற்றமாக உள்ளது. கடலோர பகுதியில் நேற்றும் பலத்த காற்று வீசியது. ஆனால் அலைகள் வழக்கத்தை விட அதிகமாக, ஆக்ரோஷத்துடன் கடற்கரையை நோக்கி சீறிபாய்ந்தபடி இருந்தன.

    இந்தநிலையில்  ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அழிக்கால் பகுதியில் திடீரென கடல் நீர் ஊருக்குள் புகுந்து வீட்டை சூழ்ந்தது. சில வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்து விட்டது. இதனால் மீனவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். கடல் அலையின் சீற்றம் தொடர்ந்து நீடித்ததால் கடற்கரையில் வசிக்கும் மீனவர்கள் அச்சத்துடனேயே இருந்தனர். மேலும், கடல் நீர் மீண்டும் வீட்டிற்குள் புகுந்து விடாமல் இருப்பதற்காக சிலர் வீடுகளின் முன்பாக மண்மூடைகளை அடுக்கி வைத்திருந்தனர்.

     

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This