இலங்கை வசம் உள்ள 118 தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட அனைத்து படகுகளும் இலங்கை வெளியுறவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. 118 படகுகளும் விரைவில் தமிழகம் அனுப்பி வைக்கப்படும் என்று இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.