போக்குவரத்துக் கழக சங்கத்தினர் விரைவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
அரசு பஸ் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும்; வேலைநிறுத்தத்தில் பங்கேற்றோர் இடமாற்றத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக தொழிற்சங்க கூட்டமைப்பினர், ஏற்கனவே ‘ஸ்டிரைக் நோட்டீஸ்’ அனுப்பினர்.
நாளை மறுநாள்(ஜூலை 28) சென்னை பல்லவன் இல்லம் முன் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. அதில் ஸ்டிரைக் நடத்துவது குறித்து அறிவிக்க உள்ளனர்.