பயிற்சி டாக்டர்கள் ஊக்கத்தொகை உயர்வு

Forums Inmathi News பயிற்சி டாக்டர்கள் ஊக்கத்தொகை உயர்வு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8538
    Kalyanaraman M
    Keymaster

    அரசு மருத்துவ கல்லூரிகளில், மருத்துவம் படிக்கும் இறுதியாண்டு கட்டாய சுழற்சி முறை உள்ளிருப்பு பயிற்சி மாணவர்கள் மற்றும் அரசு மருத்துவர் அல்லாத முதுநிலை பட்டம் மற்றும் படடயம் மற்றும் உயர் சிறப்பு மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக முதல்வர் பிறப்பித்த உத்தரவில், ஊக்கத்தொகையானது, உள்ளிருப்பு பயிற்சி மாணவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயாகவும், முதலாம் ஆண்டு முதுநிலை பட்ட மருத்துவ மாணவர்களுக்கு ரூ. 35,000 ஆகவும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.37,500 ஆகவும்,3ம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.35, 000 ஆகவும், முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் ரூ.35,000 ஆகவும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.37,500 ஆகவும்முதலாம் ஆண்டு படிக்கும் உயர் மருத்துவ மாணவர்களுக்கு ரூ.40 ஆயிரமாகவும்,2ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.43,500 ஆகவும், 3,4,5,6ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, ரூ.45 ஆயிரமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This