ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்படும் விசாரணை ஆணையங்களால் பயனில்லை எனவும், அதன் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக கூறி கடந்த 2015ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் கூறியதாவது: ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்படும் விசாரணை ஆணையங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். வெறும் கண்துடைப்புக்காகவும், மக்களின் கவனத்தை திசை திருப்பவுமே விசாரணை ஆணையங்கள் அமைக்கப்படுகின்றன. விசாரணை ஆணையங்களின் அறிக்கையால் எந்த பயனும் இல்லை. இது போன்ற ஆணையத்திற்காக பொது மக்களின் நிதியை வீணடிக்கக்கூடாது.