சென்னை அயனாவரத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்ததாக, அங்கு பணிபுரியும் காவலாளி, பிளம்பர் உள்ளிட்ட 17 பேரை கடந்த 30ம் தேதி போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர்களை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் மனு கோரினர். இதனை ஏற்று கொண்ட சென்னை மகளிர் கோர்ட், 17 பேரையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.