மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 80,291 கனஅடியில் இருந்து 48,065 கனஅடியாக சரிந்துள்ளது. அதே சமயம் அணையின் நீர்மட்டம் 120.22 கனஅடியில் இருந்து 120.29 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 46,422 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்திற்காக 850 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்இருப்பு 93.33 டிஎம்சி.,யாகவும் உள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் 68,357 கனஅடி நீர்திறந்து விடப்பட்டு வருகிறது. கேஆர்எஸ் அணையில் இருந்து 42,524 கனஅடியும், கபினி அணையில் இருந்து 25,833 கனஅடியும் நீர் திறக்கப்பட்டு வருகிறது.