இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 7 மீனவர்களும் விடுதலை

Forums Communities Fishermen இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 7 மீனவர்களும் விடுதலை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8459
    Inmathi Staff
    Moderator

    இலங்கையின் கடல் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்திருந்தனர்.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும், இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை, ஜாப்னா மீன் வளத்துறையின் சார்பில் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டால் 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவித்தது. மேலும், படகு உரிமையாளர்கள், செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும், அவர்களின் படகின் அளவு மற்றும் பிடித்த மீனின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து அபராதம் தீர்மானிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This