திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:கருணாநிதி குறித்த வதந்திகளை நம்ப தேவையில்லை. சிகிச்சை பின் வீட்டிற்கு வந்து ஒய்வெடுக்கிறார். வீட்டிற்கு வந்து 2 நாளுக்கு பிறகு காய்ச்சல் வந்தது. அதற்கு சிகிச்சை நடக்கிறது. யாரும் பயப்படவோ, அதிர்ச்சியடையக்கூடிய செய்தி ஏதும் இல்லை.தனி நபருக்கு ராணுவ ஹெலிகாப்டரை பயன்படுத்தியது ஓ.பி.எஸ்.,கூறி தெரியவந்துள்ளது. இதற்கு அனுமதித்த நிர்மலா சீதாராமனும், அதனை பயன்படுத்திய ஓ.பன்னீர்செல்வமும் உடனடியாக பதவி விலக வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வம் மீது, சொத்து குவிப்பு வழக்கு கோர்ட்டில் பதிவாகியுள்ளது. முதல்வர் மீதும் வழக்கு தொடர உள்ளோம். இதற்காக கவர்னரை சந்தித்து மனு அளிக்க உள்ளேன். விரைவில் எடப்பாடிக்கு எதிராக வழக்கு தொடரப்படும். ஓ.பி.எஸ்., இபிஎஸ், அமைச்சர்கள் சிறை செல்ல நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.
காங்., கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுலை தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், ராகுலை பிரதமர் வேட்பாளராக ஆதரிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. தேர்தல் சமயத்தில் அது குறித்து பதிலளித்தப்படும் என்றார்.