அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி துவங்க அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அரசு உத்தரவில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியில் 6 – 12 ம் வகுப்புகளுக்கு தற்போது வசூலிக்கும் கட்டணங்களையே வசூலிக்க வேண்டும். ஆங்கில வழியில் திறன்பெற்ற ஆசிரியர்கள் உள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.