வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

Forums Inmathi News வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8345
    Kalyanaraman M
    Keymaster

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 5 சென்டி மீட்டர் மழையும், மேலூர் மற்றும் சின்னக்கல்லாரில் தலா 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ள வானிலை மையம், அதன் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.

    மேலும், சென்னையில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This