தமிழக துணை முதல்வரை சந்திக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மறுப்பு

Forums Inmathi News தமிழக துணை முதல்வரை சந்திக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மறுப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8342
    Kalyanaraman M
    Keymaster

    டெல்லியில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    டெல்லிக்கு நேற்று மாலை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்றார். இது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கவே டெல்லி வந்துள்ளதாக கூறினார்.

    இந்த நிலையில், அதிமுக எம்.பி. மைத்ரேயனுக்கு மட்டுமே நிர்மலா சீதாராமனை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதனால், ஓ.பன்னீர்செல்வம் நிர்மலா சீதாரமனை சந்திக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சக அலுவலக ட்விட்டர் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This