சென்னை மின் ரயிலில் இருந்து விழுந்து 4 பேர் பலி

Forums Communities Chennai சென்னை மின் ரயிலில் இருந்து விழுந்து 4 பேர் பலி

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #8331
  Kalyanaraman M
  Keymaster

  சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரயிலில் பயணித்த 4 பேர் அடிபட்டு இறந்தனர். மாம்பலம் கோடம்பாக்கம் இடையே மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. குறைவான ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டதால், ரயில்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.

  இதில், ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பலர் சென்றனர். இந்நேரத்தில் பரங்கிமலையில் தடுப்புச்சுவரில் அடிபட்டு சிலர் விழுந்தனர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமுற்று குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  ரயில் விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் எனவும், காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் எனக்கூறியுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This