தேசிய மீனவர் பேரவை தலைவரும் புதுச்சேரி மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மா. இளங்கோ கோரிக்கை விடுத்ததை அடுத்து புதுச்சேரி அரசு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் புதுச்சேரி மாநில மீன் அங்காடிகளில் சோதனை நடத்தி பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்களை மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இது குறித்து தேசிய மீனவர் பேரவை தலைவர் .
திரு. மா. இளங்கோ கூறியதாவது:
நாடுமுழுவதும் மீன்களில் குறிப்பாக பிற வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களில் பார்மாலின், சோடியம் பென்சோனட் அமோனியா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைட் போன்ற இரசாயனம் கலந்திருப்பதாக கூறப்படுகிறது.
சோடியம் பென்சொநேட் விட்டமின் E மற்றும் விட்டமின் C ஆகியவற்றுடன் இணையும் போது Benzene என்ற வேதில் பொருள் உருவாகிறது. இந்த வேதிப்பொருள் மனித உடலில் இரத்த அணுக்களை சாகடித்து புற்றுநோய் மற்றும் மனிதனின் எலும்புக்குள் உள்ள மஜ்ஜை (Bone Marrow ) யின் உயிரணுக்களை பாழாக்கி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்றது. மனித ஆயுட்காலத்தை குறைத்து விடுகிறது.
இத்தகைய ஆபத்துகள் உள்ளதால் இரசாயன கலவை சேர்ந்த மீன்களிடமிருந்து மக்களை காப்பாற்ற அசாம், மணிப்பூர், கோவா, போன்ற மாநிலங்களில் வெளி மாநில மீன்களை இறக்குமதி செய்ய தடைவிதித்துள்ளனர்.
இப்பிரச்சனை குறித்து தேசிய மீனவர் பேரவை அவ்வப்போது மத்திய மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு வந்து, எச்சரிக்கை செய்து கோரிக்கையும் விடுத்துள்ளது.
தேசிய மீனவர் பேரவையின் கோரிக்கையை அடுத்து தற்போது புதுச்சேரி மாநிலத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி தன்ராஜ் தலைமையில் அதிகாரிகள் மீன் அங்காடிகளில் தீவீர சோதனைகளில் ஈடுபட்டனர்.
கேரளா, ஆந்திர போன்ற வெளிமாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்கள் உள்பட மீன்களை பரிசோதனைக்கு மாதிரி எடுத்துச்சென்றுள்ளனர். அதிகாரிகளின் இச்செயல் பொதுமக்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளது.
இவ்வாறு இளங்கோ கூறினார்.