நாகையில் மீன் வளர்ப்பு மேம்பாட்டு முகமையில் உறுப்பினர் சேர்க்கை

Forums Communities Fishermen நாகையில் மீன் வளர்ப்பு மேம்பாட்டு முகமையில் உறுப்பினர் சேர்க்கை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #8318
  Inmathi Staff
  Moderator

  நாகை மாவட்டத்தில் மீன் வளர்ப்பு மேம்பாட்டு முகமையில் உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம் 27ம் தேதி நடக்கிறது.நாகை மாவட்டத்தில் நன்னீர் மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராகி தமிழக மீன்வளத்துறை மூலம் அரசு சலுகைகளை பெற்று பயன்பெற அழைக்கப்படுகிறார்கள். நாகை மீன்வள இணை இயக்குனர் அலுவலகத்தில், வருகிற 27ம் தேதி (வெள்ளி) மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. எனவே நன்னீர் மீன்வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று கொள்ளலாம்.

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன், நிலப்பத்திர பதிவு நகல், பட்டா நகல், சிட்டா அடங்கல், எப்எம்பி வரைபடம், கிராம நிர்வாக அலுவலர் சான்று, பண்ணையின் மாதிரி வரைபடம், ரேஷன்கார்டு நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், விண்ணப்பதாரரின் புகைப்படம் 1, மீன் வளர்ப்பு செய்யும் குளத்தின் வரைபடம், ரூ.1000த்திற்கான வங்கி வரைவோலை அசல் ஒன்றும், 3 நகல்களுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
  மேலும் விவரங்களுக்கு மீன்வளத் துறை உதவி இயக்குனரை 9384824258 என்ற எண்ணையோ அல்லது மீன் துறை ஆய்வாளரை 9384824345 என்ற எண்ணையோ தொடர்பு கொண்டு அறியலாம் என சிக்கல் வேளாண்மை அறிவியல் மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This