விவசாயிகள் அதிக மகசூல் பெற வேண்டும் என்ற நோக்கில் நெல்லுக்கு பல்வேறு வகை செயற்கை ரசாயன உரங்களை இடுகிறார்கள். அல்லது இயற்கை உரங்கள் பலவற்றை தெளிக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் விட ஒரு எளிய வழிமுறையை ஈரோடு அருகில் ஒரு விவசாயி பின்பற்றியிருக்கிறார். அவருடைய வயலில் அமோக விளைச்சலை அறுவடை செய்துள்ளார்.
என்ன அந்த எளிய வழிமுறை என்றுதானே கேட்கிறீர்கள்
சமையலுக்கு பயன்படுத்தும் கட்டி பெருங்காயத்தை கிலோ கணக்கில் வாங்கி அதனை மூட்டையாக கட்டியுள்ளார். பின்பு அதனை நெல்லுக்கு நீர் பாயும் கால்வாயில் போட்டுள்ளார். அந்த பெருங்காயம் சிறுது சிறிதாகக் கரைந்து நெல் பயிருக்கு உரமாக சென்றுள்ளது. விளைவு… அந்த பருவ சாகுபடியில் நெல் மகசூல் முன்னைவிட சில மூட்டைகள் அதிகமாகக் கிடைத்துள்ளது.
இந்த எளியமுறையை நீங்களும் பின்பற்றி பாருங்களேன்.