ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. லுக்அவுட் நோட்டீசை எதிர்த்தும், வெளிநாடு செல்ல அனுமதி அளிக்கும்படியும் சுப்ரீம் கோர்ட்டில் கார்த்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஜூலை 31 வரை கார்த்தி வெளிநாடு செல்ல அனுமதி அளித்துள்ளது. பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.