மதுரை காமராஜர் பல்கலைகழகத்திற்கு புதிய துணைவேந்தரை நியமிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைகழகத்திற்கு துணைவேந்தராக இருந்த செல்லத்துரையின் நியமனம் செல்லாது என சென்னை ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் பணியில் தேர்வுக் குழு இறங்கியது. இதற்கிடையில் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் செல்லத்துரை மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், மதுரை காமராஜர் பல்கலை.,க்கு புதிய துணைவேந்தரை நியமிக்க இடைக்கால தடை விதித்தது. தேடல் குழு தங்கள் பணியை தொடர்ந்து செய்யலாம். புதிய துணைவேந்தரை தேர்வு செய்யலாம். ஆனால் நியமனம் செய்யக் கூடாது என தெரிவித்து, விசாரணையை ஆக.6 ம் தேதிக்கு ஒத்தவைத்தது.