மேட்டூர் அணை இன்று தன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. அதன்பிறகு ஐந்து வருடங்கள் கழித்து தற்போதுதான் மேட்டூர் அணை முழுவதுமாக நிரம்பியுள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி 116.98 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இரவு 8 மணி அளவில் 118 அடியாக உயர்ந்தது. இதனால், பாதுகாப்பு கருதி அணையில் இருந்து நேற்று இரவு 8 மணிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
நீர் மின் நிலைய மதகுகள் மூலம் கூடுதலாக வினாடிக்கு 2,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதுதவிர 16 கண் பாலத்தில் உள்ள மதகுகள் வழியாக வினாடிக்கு 7,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 80, 000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கபினி அணையில் இருந்து 30000 கனஅடியாகவும், கேஎஸ்ஆர் அணையில் இருந்து 51038 கனஅடியாகவும் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அணை முழுவதுமாக நிரம்பியுள்ளாது. மேட்டூர் அணாஇ கட்டடப்பட்டதிலிருந்து 39ஆவது முறையாக அணை தன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.