​மகான்களை தோற்றுவிக்கும் ஞானபூமியாக தமிழகம் திகழ்கிறது: முதல்வர்

Forums Inmathi News ​மகான்களை தோற்றுவிக்கும் ஞானபூமியாக தமிழகம் திகழ்கிறது: முதல்வர்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8159
    Kalyanaraman M
    Keymaster

    மகான்களை தோற்றுவிக்கும் ஞானபூமியாக தமிழகம் திகழ்கிறது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    சென்னை மாதவரத்தில் நடைபெற்ற ஜெயின் சமூக ஆன்மீக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், இந்தியா ஒரு திருக்கோயில் என்றால், அதில் இறைவன் நிறைந்திருக்கும் இடம்தான் தமிழ்நாடு என கூறினார். உலக நன்மைக்காக தங்களை வருத்தி கொண்டு ஜெயின் சமூகத்தினர் நடைபயணம் மேற்கொள்வது குறித்து முதல்வர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

    மகான்களின் பாதை ஆன்மீகம் எனவும்,  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பாதை அரசியல் எனவும் குறிப்பிட்ட அவர், இவை இரண்டுமே மக்களின் நலன் சார்ந்தது என குறிப்பிட்டார். சென்னையில், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் ஜெயின் சமூகத்தினரின் பங்களிப்பு அதிகம் இருந்தது அதற்கு முதல்வர் நன்றி கூறினார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This