கணவாய் மீன் கொள்முதலை தனியார் நிறுவனங்கள் நிறுத்தியதால் நெருக்கடியில் மீனவர்கள்

Forums Communities Fishermen கணவாய் மீன் கொள்முதலை தனியார் நிறுவனங்கள் நிறுத்தியதால் நெருக்கடியில் மீனவர்கள்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8154
    Inmathi Staff
    Moderator

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளான திருப்பாலைக்குடி, தேவிபட்டினம்,மோர் பண்ணை, முள்ளிமுனை, தொண்டி புதுக்குடி போன்ற பகுதிகளில் உள்ள மீனவர்கள் கணவாய் மீன்பிடித் தொழிலை சீசன் காலங்களான ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் போன்ற மாதங்களில் தீவிரமாக செய்து வருகின்றனர்.இவர்கள் பிடித்து வரும் மீன்களின் அளவுக்குத் தகுந்தவாறு சுமார் 500 கிராமுக்கு மேல் எடையுள்ள கணவாய் மீன் சுமார் ரூ.400க்கும், அதற்கு அடுத்த ரகம் கிலோ ரூ. 140 முதல் மீனவர்களிடம்  தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்து வந்தனர்.

    இந்நிலையில், திடீரென தனியார் நிறுவனங்கள் கணவாய் மீன் கொள்முதலை நிறுத்தியுள்ளன. இதனால் மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்துள்ள மீன்களை விற்பனை செய்ய முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து, தேவிப்பட்டினம் மீனவர் முருகதாஸ் கூறுகையில், “ இந்த நிறுவனங்கள் எவ்வித காரணமும் சொல்லாமல் எங்களிடமிருந்து கணவாய் மீன்களை வாங்குவதை நிறுத்திவிட்டன. இதனால் நாங்கள் திடீர் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறோம். நாங்களே, இதை விற்க முயற்சித்தாலும் எங்களுக்கு போதிய விலை கிடைக்காத நிலையில் உள்ளோம். ஆகவே மீன் வளத்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This