பார்மாலின் கலப்பில் மீனவர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை : தேசிய மீனவர் தலைவர்

Forums Communities Fishermen பார்மாலின் கலப்பில் மீனவர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை : தேசிய மீனவர் தலைவர்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #8073
  Inmathi Staff
  Moderator

  மீன்களில் பார்மலின் கலப்பதற்கும், மீனவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தேசிய மீனவர் பேரவைத் தலைவர் மா. இளங்கோ கூறியுள்ளார். இதுகுறித்து, பாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :

  சமீபகாலமாக மீனில் ரசாயனம் கலப்பது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் பல பாகங்களிலும், கேரளாவில் மீன் பதப்படுத்தும் ஐஸ் தயாரிக்கும் போது அதில் பார்மாலின் கலப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே, சோடியம் பென்சோனேட் கலக்கப்படுவதாகவும் கேரளாவில் ஒரு குற்றச்சாட்டு உண்டு. இது போன்ற ரசாயனங்கள் இறந்து போன மனிதர்களின் உடலை பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுபவை. இந்தியாவில் கிட்ட்தட்ட 100 கோடி பேர் உண்ணும் மீன் உணவில் இத்தகைய ரசாயன்ங்கள் கலப்பது ஆபத்தானது. பீகார், ஒரிஸ்ஸா, மணிப்பூர் போன்ற சில மா நிலங்களில் மீன்களில் ரசாயன கலப்பு அச்சம் காரணமாக வெளி மாநில மீன்களை அம்மாநிலங்களில் இறக்குமதி செய்ய 10 நாள்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோவா மாநிலத்திலும் இந்த மாத இறுதி வரை வெளி மா நில மீன்கள் விற்க தடைவிதித்து முதல்வர் மனோகர் பரிக்கர் உத்தரவிட்டுள்ளார். எந்த மா நிலத்திலும் மீனவர்கள் தங்களுக்கு தலைமுறை தலைமுறையாக வாழ்வளிக்கும் மீனில் கலப்படம் செய்வதில்லை. சிறு மீன் வியாபாரிகளும், அதுபோன்று செய்வதில்லை. மொத்த கொள்முதல் செய்பவர்களில் சிலர் பேராசைக் காரணமாக சக மனித உயிர்களோடு விளையாடுகிறார்கள். இதனால்தான் அஸ்ஸாம்  மா நிலத்தில் ரசாயன கலப்பு கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.10 லட்சம் அபராதமும், 7 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசும், 36 மாநில அரசுகளும் இப்பிரச்சினையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். 100 கோடி மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இத்தகைய செயலில் ஈடுபடுபவர்களுக்கு முதல் தடவை 10 லட்சம் அபராதமும் 10 ஆண்டு சிறைத்தண்டனையும் வழங்க வேண்டும். அதே நபர் இரண்டாவது முறை குற்றத்தில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனையும் தொடர்ந்தால் தூக்குதண்டனையும் விதிக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங்கை தேசிய மீனவர் பேரவை சார்பில் சந்திக்க உள்ளேன். தேசிய மீனவர் பேரவையில் அங்கம் வகிக்கும் மீனவ சமுதாய அமைப்புகள் மூலம் அனைத்து மாநில மீன் வளத்துறை அமைச்சர்கள் முதலமைச்சர்களை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்த உள்ளோம் என்றார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This