திருச்சி கலல்ணையில் இருந்து ஜூலை 22ஆம் தேதி பாசனதுக்காக நீர் திறந்துவிடப்படும் என அமைச்சர் துரைக்கண்ணு கூறியுள்ளார்.
தென்மேற்கு பருவமழையின் காரணமாக கர்நாடகாவின் அனைத்து அணைகளும் நிரம்பின. அதையடுத்து காவிரியில் நீர் திறந்துவிடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் மேலாக நிரம்பியது. அதனால் மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தண்ணீர் திறந்துவிட்டார். அது டெல்டா பகுதி விவசாயிகளின் குறுவை பயிருக்கு உதவி செய்யாது என்ற போதும் சம்பா பயிருக்கு உதஎவும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் காவிரி நீர் கடைமடை பகுதிக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காக கல்லணையில் இருந்து நீர் ஜூலை 22 ஆம் தேதி திறந்துவிடப்படும் என அமைச்சர் துரைக்கண்ணு கூறியுள்ளார்.