குளச்சல் மிகவும் பழமையான துறைமுகப் பாலம் ஒன்று அமைந்துள்ளது. தொடர் கடல் சீற்றம் காரணமாக இந்த துறைமுக பாலத்தின் தூண் ஒன்று சரிந்து கடலில் விழுந்தது. கடந்த 15 வருடத்திற்கு முன்பு பெய்த கனமழையின் போது ஏற்கனவே 5 தூண்கள் சரிந்து கடலில் விழுந்தது குறிப்பிடத்தக்கது.
தினமும் மாலை குளச்சல் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் இந்த துறைமுக பாலத்தின் மீது நின்று கடற்கரையை ரசித்து செல்வது வழக்கம். தற்போது துறைமுக பாலத்தின் தூண்கள் சரிந்து வருவதால் பாலத்தின் மீது செல்லும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் பாலத்தின் அடிப்பாகத்தில் காங்கிரீட்கள் அனைத்தும் உடைந்து அபாய நிலையில் காணப்படுகிறது. இதனால், குளச்சல் கடல் பகுதிக்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.