கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியார் அணையில் நீர் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆழியார் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. அணைக்கு சின்னாறு, நவமலை, குரங்கு அருவி, அப்பர்ஆழியார் ஆகியவற்றில் இருந்தும் தண்ணீர் வரத்து இருக்கும். இதனால் அணை தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அதனால் ஆழியாரை சுற்றியுள பகுதிகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.