நெல்லை தீவிபத்தை தொடர்ந்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் சுற்றறிக்கை

Forums Inmathi News நெல்லை தீவிபத்தை தொடர்ந்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் சுற்றறிக்கை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8024
    Kalyanaraman M
    Keymaster

    நெல்லையில் தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தை தொடர்ந்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில், பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் உபகரணங்கள், மூலப்பொருட்களை வெளியே வைக்க வேண்டாம். மாணவர்கள், வகுப்பறைக்கு அருகாமையில் மூலப்பொருட்கள் வைப்பதை தடுக்க வேண்டும். கழிப்பறைகளை சுத்தம் செய்யும் மூலப்பொருட்களை பயன்படுத்தும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை தர வேண்டும்.
    மூலப்பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பூட்டிய அறையில் வைக்க வேண்டும். வேதியியல் ஆய்வுக்கூடத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் எரிவாயு சிலிண்டரை பாதுகாப்பான இடங்களில் வைக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This