நீட் வினாத்தாளை மொழிபெயர்ப்பு செய்ய தமிழக அரசு நியமித்தவர்களையே பயன்படுத்தினோம். மொழி பெயர்ப்பு தவறாக இருந்ததற்கு மத்திய அரசு பொறுப்பல்ல.அடுத்தாண்டு முதல், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்கப்படும் என்று பாராளமன்றத்தில் அதிமுக எம்.பி.,க்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவேத்கர் பதில் அளித்தார்.
554 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, 196 கருணை மதிப்பெண் மதிப்பெண் வழங்கினால், அவரது மொத்த மதிப்பெண் 750 ஆக உயரும். மொத்த மதிப்பெண்ணே 720 தான் என்ற நிலையில், கருணை மதிப்பெண்ணாக தமிழில் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 196 மதிப்பெண்களை எப்படி தர முடியும்? கருணை மதிப்பெண்ணால் குழப்பம் மட்டுமே ஏற்படும் என்று சிபிஎஸ்இ மனு தாக்கல் தாக்கல் செய்துள்ளது.