மீனவர்களுக்கு நலத்திட்டங்களை வாரி வழங்கிய பாண்டிச்சேரி மீன்வளத்துறை அமைச்சர்

Forums Communities Fishermen மீனவர்களுக்கு நலத்திட்டங்களை வாரி வழங்கிய பாண்டிச்சேரி மீன்வளத்துறை அமைச்சர்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #8018
  Inmathi Staff
  Moderator

  பாண்டிச்சேரியில் மீனவர்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, நேற்று சட்டமன்றத்தில் நடந்த மானியக் கோரிக்கையின் போது பேசிய அவர்,

  மீனவர்கள் எவரேனும் கடலில் விழுந்து இறந்தால், அவர்கள் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.2 லட்சம் ரூபாய் நிதி தற்போது ரூ.10 லட்சமாக உயர்த்தப்படுகிறது. விபத்தில் மீனவர் இறந்தால் ரூ.5 லட்சமும், ஓகிப் புயலில் பிற மாநிலங்களில் மீன் பிடிக்கச் சென்று இறந்து போன அல்லது காணாமல் போன மீனவர்கள் குடும்பத்தினருக்கு தமிழகத்தைப் போன்றே இழப்பீடு வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார். மேலும், 50 வயதிற்கு மேற்பட்ட மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை வழங்கப்படாமல் இருந்த 1679 மீனவர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும்,  ஈமச்சடங்கு நிதி ரூ.10000 ஆக உயர்த்தி வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். விசைப்படகு மீனவர்களுக்கான காப்பீடு திட்டம் இதுவரை 75 % வரை  புதுச்சேரி அரசு  திரும்ப அளித்த நிலையில், இனிமேல் 90 %  வரை  திரும்ப அளிக்கும் நடைமுறை பின்பற்றப்படும், வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் மீன்வளம் மற்றும் மீனவர் மேம்பாட்டுக் கழகம் செயல்படத் துவங்கும். தடைகால நிவாரணம், ஓய்வூதியம் உள்ளிட்ட பயனாளிகளின் வருமான உச்சவரம்பு ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் என இருந்ததை தற்போது ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

  அதுபோன்றே குடும்ப அட்டை பெறாத, திருமணமான மீனவர்கள், வாழ்வாதாரத்திற்காக வெளிநாட்டில் ஆண்கள் சென்றிருந்தால் கூட இங்குள்ள பெண்களுக்கு  நிவாரணத்தொகை வழங்கப்படும். அதாவது, நிவாரணம் பெற குடும்ப அட்டை கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் மீனவர்கள் மானியத்துடன் ஆழ்கடல் மீன்பிடிப்படகுகள் வாங்க உதவி செய்யப்படும்.

  மீனவர்களின் பிள்ளைகள், 12 ஆம் வகுப்பு தேர்வில் 75% வரை ரொக்கப் பரிசு  ரூ.5000 வழங்கப்பட்டு வருகிறது. அது தற்போது, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  ரூ.10000 எனவும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.15 ஆயிரம் எனவும் உயர்த்தி வழங்கப்படும். கூடவே, இத்திட்டம் அரசுப்பள்ளி மாணவர்கள் எனில் 60% மதிப்பெண்கள் இருந்தாலே நடைமுறைப்படுத்தப்படும். அதுபோன்றே தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். டீசல் பங்கு இல்லாத நான்கு கிராமங்களில் புதிய டீசல் பங்குகள் வழங்கப்படும். இவற்றில், மானிய டீசலும், கூடுதலாக டீசல் தேவைப்பட்டால் சந்தை விலையிலும் வழங்கப்படும்.  பாகூர் பகுதியில், பாதியில் நிறுத்தப்பட்ட மீன் பிடி தங்கு தளத்தை , அதை உடனடியாக கட்டிமுடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எண்ணற்ற நலத்திட்டங்களை அறிவித்தார்.

  இதுகுறித்து, பாண்டிச்சேரி முன்னாள் எம்.எல்.ஏவும் , தேசிய மீனவர் பேரவை தலைவருமான மா.இளங்கோ கூறுகையில், ” அமைச்சரின் இந்த அறிவிப்புகள், வரவேற்கத் தக்க ஒன்று. இது பாண்டிச்சேரி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான வரலாற்றுப் பூர்வமான அறிவிப்புகள். இதனை நடைமுறைப்படுத்தும் போது, மாநிலத்தில் மீனவர்கள் வாழ்வில் பெரும் முன்னேற்றமும் மறுமலர்ச்சியும் ஏற்படும். ” என்றார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This