பழமரங்களில் பூச்சி மேலாண்மையில் உள்நாட்டு தொழில் நுட்பங்கள்
மாவில் கொட்டை கூன் வண்டுகளை கட்டுப்படுத்த மிளகு அறுவடைக்குப் பின் கிடைக்கும் தட்டைகளை மாந்தோப்பில் எரிக்கலாம்.
கொத்தமல்லி, புதினா, இஞ்சி மற்றும் மஞ்சள் ஆகியவற்றை மாந்தோப்பில் பயிரிடுவதால் பெரும்பான்மையான பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
மாட்டுக்கோமியம் அல்லது புகையிலைச் சாறு ஆகியவற்றைத் தெளிப்பதால் திராட்சையில் பூச்சிகளையும் நோய்களையும் கட்டுப்படுத்தலாம்.
காய்கறி பயிர்களில் பூச்சி மேலாண்மையில் உள்நாட்டு தொழில் நுட்பங்கள்
கத்தரியில் வரப்போரப்பயிராக துலுக்கமல்லியை வளர்க்கும் போது தண்டு மற்றும் காய்த்துளைப்பான்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. நொதிக்க வைக்கப்பட்ட கோமியத்தை நீருடன் கலந்து தெளிப்பதால் மற்ற பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
தொகுப்பு: ச கண்ணன்: மூத்த வேளண்மை அலுவலர் விதை பரிசோதனை நிலையம் திருவாரூர்
காலிபிளவர் நர்சரியில் வரும் வண்டுகளின் இளம் பருவத்தை அழிக்க மண்ணெண்ணையைவண்டுகளால் ஏற்படுத்தப்பட்ட குழிகளில் ஊற்றி அழிக்கலாம்.
மலர்களில் பூச்சி மேலாண்மையில் உள்நாட்டு தொழில் நுட்பங்கள்
ரோஜாசெடியில் கரையான்களைக் கட்டுப்படுத்த ரோஜா இளநாற்றுகளை யூஃபோர்பியேஸியே குடும்பத் தாவரங்களிலிருந்து பெறப்படும் பால் போன்ற திரவத்தை நீரில் கலந்து பெறப்படும் கலவையில் நனைத்தபின் நடவு செய்யலாம்.