மீன் வளத்துறை அமைச்சர் மற்றும் முதல்வருக்கு நாகை மீனவர்கள் நன்றி

Forums Communities Fishermen மீன் வளத்துறை அமைச்சர் மற்றும் முதல்வருக்கு நாகை மீனவர்கள் நன்றி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #8012
    Inmathi Staff
    Moderator

    கடந்த சில தினங்களுக்கு முன், ஆந்திரா மாநிலம் நெல்லூரில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 19 பேரை அங்குள்ள மீனவர்கள் கடுமையாக தாக்கியதுடன் அவர்கள் சென்ற  படகுகளையும் பிடித்து ஆந்திரா போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவ்விவகாரத்தில் காயம்பட்ட மீனவர்கள் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டனர்.

    இதனிடையே, இவ்விவகாரத்தில் தமிழக மீன் வளத்துறை அமைச்சர் தலையிட்டு பிரச்சனையை சுமூகமாக தீர்க்க முயற்சி மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக நாகை மீனவர்களின் பிரதிநிதிகள், நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினர். இதனையடுத்து, ஆந்திராவில் பிடித்து வைக்கப்பட்டிருந்த மீனவர்கள் 19 பேரும், அவர்கள் சென்ற இரு படகுகளுடன் அபராதம் எதுமின்றி விடுவிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து பேசிய நாகை மீனவப் பிரதிநிதிகள், முதல்வரும் , மீன்வளத்துறை அமைச்சரும் இவ்விவகாரத்தில் நல்ல முறையில் தலையிட்டு தீர்வு ஏற்படுத்தி தந்ததாகக் கூறினர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This