
தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறை (அடர்த்தியாக)சோளம் விதைத்தால் கோரை வருவதில்லை.
சோளம் விதைத்த பூமியில் மஞ்சள் நடவு செய்து பாருங்க மகசூல் அதிகம் இருக்கும்
கம்பு விதைத்த பூமியில் வாழை நடவு செய்து பாருங்க வாழை மகசூல் அதிகம் இருக்கிறது
கம்புபோட்ட வயலில் கடலையும் ,கடலலைபோட்ட வயலில் கம்பும் ,பயிரிட்டால் விளைச்சல் அதிகமாக இருக்கும்.
யூரியாவுக்கு பதிலா மாட்டு கோமியம்
டிஏபி க்கு பதிலா ஜீவாமிர்தம்,அமுதகரைசல்
பொட்டாஷ்க்கு பதிலா அடுப்பு சாம்பல்
தலைசத்தை பயிருக்கு இழுத்துகொடுக்க பலதானியம், கொழுஞ்சி விதைப்பு
ஆல் 19 க்கு பதிலா பஞ்சகவ்யா
பயிர் ஊக்கிக்கும் பஞ்சகவ்யா
பூச்சிகொல்லிக்கு பதிலா சிட்டுக்கு குருவி,கரிச்சாங்குருவி, காகம், தேன்சிட்டு, பல்லி, பூரான், தேள், மயில், பாம்பு
பூச்சி விரட்டிக்கு வேப்ப எண்ணை, புங்க எண்ணை
மகரந்த சேர்க்கைக்கு தேன்பூச்சி
பார்த்தீனியா விஷசெடியை அழிக்க நாம் சாப்பாட்டுக்கு பயன்படுத்தும் கல் உப்பு
களைக்கொல்லிக்கு பதிலா மாட்டு கோமியம்
ஏழு அடி ஆழத்தில் மண்ணில் இருக்கும் சத்துக்களை மேலே எடுத்து கொண்டுவர மண்புழு.
பூமியை காற்றோட்டத்தை உருவாக்க கரையான், எலி
நாட்டுக் கோழி முட்டைய பாதுகாத்து வைக்க சுலபமான வழி இருக்கு.
மண் பானையில பாதி அளவுக்கு அடுப்புச் சாம்பல் போட்டு நிரப்புங்க. அதுக்குள்ள கோழி முட்டைகளை அடுக்கி வைங்க. இப்படி செஞ்சா ஒருமாசம் வரைக்கும் கூட முட்டை கெட்டுப் போகாம இருக்கும்.
மா, கொய்யா, சப்போட்டா பழத் தோட்டங்கள்ல அணிளோட நடமாட்டம் அதிகமாக இருக்கும். அணில்கள விரட்ட ஒரு யோசனை சொல்றேன் கேட்டுக்குங்க. ஒரு கைப்பிடி பூண்டு எடுத்து அரைச்சுக்குங்க. அதை நாலு லிட்டர் தண்ணியில கலந்து பழ மரத்து மேல தெளிங்க. பூண்டு வாசனையை கண்ட அணில்கள் தலைத்தெறிக்க ஓடிபோயிடும். பழத் தோட்டமும் பாதிப்பு இல்லாம இருக்கும்.
தென்ன மரம் அதிகம் காய் காய்க்க, ஒரு யுக்தியை செஞ்சிகிட்டு இருக்காங்க ஒரிசா மாநில விவசாயிங்க. அதாவது தென்னம் பாளையில ஒரு செங்கல்லைக் கட்டித் தொங்க விடறாங்க. இதனால பாளையில இருக்குற குரும்பைகள் கொட்டாம குலை குலையா தேங்காய் காய்க்குதாம்.