டாஸ்மாக் குப்பைகளால் நிறையும் குமரி கடற்கரை

Forums Communities Fishermen டாஸ்மாக் குப்பைகளால் நிறையும் குமரி கடற்கரை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #7974
  Inmathi Staff
  Moderator

  குமரி கடற்கரைகளில் டாஸ்மாக் குப்பைகள் குவிக்கப்படுவதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். பொதுவாக, பல குடிமகன்களும், கடல் அலைகளை ரசித்தபடியே டாஸ்மாக்கிலிருந்து மதுபானங்களை வாங்கிவிட்டு அவற்றை அருந்த கடற்கரையோரங்களுக்கு வருவது வழக்கம்.

  இவ்வாறு வரும் போது, தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் சிறு பிளாஸ்டிக் கப்புகளும் சேர்த்தே கொண்டு வந்துவிடுகின்றனர். இயற்கையை ரசித்தபடியே, மது போதையில் திளைக்கும் இக்குடிமகன்கள், தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் கப்புகளையும், தண்ணீர் பாக்கெட்டுகளையும்,  மது பாட்டில்களையும் அந்த கடற்கரைகளிலேயே விட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர். எளிதில் மக்காத இந்த குப்பைகள் கடல் சூழியலுக்கு ஆபத்தாக மாறிவருவதாக மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைகழக கடல் வள ஆராய்ச்சி மைய பேராசிரியர் சிற்றரசு கூறுகிறார்.அவர் மேலும் கூறுகையில் , “ கடந்த ஜூன் 5 அன்று நாங்கள் உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு  ராஜாக்கமங்கலம்  கடலோரப் பகுதியில் குப்பைகளை பொறுக்கினோம். அப்போது, வெறும் 50 மீட்டர் பரப்பளவிலிருந்து மட்டுமே சுமார் 25 கிலோ அளவிலான மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்களை அள்ளினோம்.” எனக் கூறுகிறார். டாஸ்மாக் குடிமகன்களால் கொண்டுவரப்படும் மதுபாட்டில்கள், சில நேரங்களில் கடற்பகுதியைக் காண வரும் மக்களின் கால்களையும் பதம் பார்த்துவிடுகின்றன.

  • This topic was modified 2 years, 11 months ago by Inmathi Staff.
Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This