உலக ஜூனியர் ஸ்குவாஷ் சென்னையில் இன்று துவக்கம்

Forums Inmathi News உலக ஜூனியர் ஸ்குவாஷ் சென்னையில் இன்று துவக்கம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #7941
  Kalyanaraman M
  Keymaster

  இந்தியா உட்பட, 28 நாடுகள் பங்கேற்கும், உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் போட்டி, சென்னையில் இன்று துவங்க உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆதரவுடன், இந்திய ஸ்குவாஷ் ராக்கெட் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு ஸ்குவாஷ் ராக்கெட் சங்கம் சார்பில், மூன்றாவது உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் போட்டி, சென்னையில் இன்று துவங்கி, 29ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்தியா உட்பட, 28 நாடுகளைச் சேர்ந்த வீரர் – வீராங்கனையர் பங்கேற்கின்றனர். இதில், ஆறு இந்திய வீராங்கனை உட்பட, 55 பெண்களும், 116 ஆண்கள் என, 177 பேர் பங்கேற்கின்றனர்.இன்று முதல், 23ம் தேதி வரை தனி நபர் பிரிவுக்கும், 24 முதல், 29ம் தேதி வரை, அணி பிரிவுகளுக்கும் போட்டிகள் நடக்க உள்ளன.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This