சென்னை ஆர்.கே. நகர் தொகுதி எம்எல்ஏ தினகரன் தனது தொகுதிக்கு வந்தபொழுது, அவர் வருகைக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொகுதிக்குள் வரவிடாமல் தம்மை அ.தி.மு.க.வினர் தடுப்பதாக தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். கல்வீச்சு, மோதல் சம்பவத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 20 ரூபாய் டோக்கன் வழங்கியது அ.தி.மு.க.வினரே எனவும் குற்றம்சாட்டினார்.