நெல் மற்றும் பிற பயிர்களை பயிரிடும் வயல்களில் மயில் வந்தால், அந்த வயலில் உள்ள பயிர்களை நாசம் செய்துவிடும். மயில்களை கொல்வது சட்டப்படி குற்றம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். காரணம், மயில் நம் தேசிய பறவை.
அப்படியானால் மயில்களைக் கட்டுபடுத்த வழியே இல்லையா என்ற கேள்வி எழும். இதற்கு திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள ஒரு விவசாயி தன் அனுபவத்தைச் சொல்கிறார். அவரது வயலில் மயில் தொல்லை அதிகமிருந்துள்ளது. இதனைக் கண்ட அவர் வயலில் ஆங்காங்கே கம்புகளை நட்டு, அதில் வீணாகப் போகும் பாட்டில்களைம் பயன்படுத்த முடியாத எக்ஸ்ரே சீட்டுகளையும் கட்டித் தொங்கவிட்டுள்ளார். வயல் வெளியில் பலத்த காற்று வீசும்போது எக்ஸ்ரே பாட்டில் மீது மோதி எழுப்பும் வினோத ஒலிக்கு பயந்து மயில்கள் வயலுக்கு வருவது கட்டுப்பட்டுள்ளது என்கிறார் அந்த விவசாயி.
நீங்களும் முயன்று பார்த்து சொல்லுங்கள்.