பருத்தி பயிர் பாதுகாப்பில் உள்நாட்டு தொழில் நுட்பங்கள்
பருத்தியில் ஊடுபயிராக ஆமணக்கை பயிரிடும் போது புகையிலைப் புழுக்களும், மக்காச்சோளம் மற்றும் வெண்டை பயிரிடும் போது காய்ப்புழுக்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன. பருத்தியில் வெள்ளை ஈக்களையும் மற்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் கட்டுப்படுத்த வெள்ளைத் துணியை துண்டுகளாக வெட்டி அதனை மஞ்சளில் நனைத்து காயவைத்தபின் அவற்றை ஆமணக்கு எண்ணெய்யில் நனைத்த வயலில் கட்டித் தொங்கவிடலாம்.
மேலும், வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த அரளிவிதை தூளையும், காய்புழுக்களைக் கட்டுப்படுத்த வேப்பவிதைத் தூளையும் வயலில் தூவலாம். சாம்பலைத் தூவுவதன் மூலம் அசுவிணி, இலைப்பேன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
கரும்பு பயிர் பாதுகாப்பில் உள்நாட்டு தொழில் நுட்பங்கள்
கரும்பு நட்ட வயலில் வெள்ளை ஈக்களையும், எறும்புகளையும் கட்டுப்படுத்த 20 கிலோ வெங்காயத்தை அரைத்து அந்த விழுதை வயல்வெளியில் ஆங்காங்கு வைக்கலாம் அல்லது நீரில் கலந்து