கடலில் காப்பாற்றப்பட்ட இலங்கை மீனவரை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க கோரிக்கை

Forums Communities Fishermen கடலில் காப்பாற்றப்பட்ட இலங்கை மீனவரை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க கோரிக்கை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #7862
  Inmathi Staff
  Moderator

  இராமேஸ்வரம் மீனவர்களால் மீட்கப்பட்ட இலங்கை மீனவரை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப கோரிக்கை எழுந்துள்ளது.

  இலங்கையின் மன்னார் மாவட்டம்  முருகன் கோயில் 7 வது வட்ட்த்தை சேர்ந்தவர் அந்தோணி மகன் மரியதாஸ். இவரும் அதே பகுதியை சேர்ந்த காமசிங்கன் மகன் அன்றனுமாக ஒரு படகில் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தியதி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதர்பாராத சூறைக்காற்றில் அவர்கள் படகு கவிழவே இருவரும் டீசல் கேனைப் பிடித்தபடி கடலில்  நீந்தியபடி இருந்துள்ளனர். இதனிடையே, அன்றன் கடலில் மூழ்க, மரியதாஸை ராமேஸ்வரம் மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். ராமேஸ்வரம் கடலோர காவல் போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த விசாரித்த நிலையில், மீனவர்களால் மீட்கப்பட்ட இலங்கை மீனவர் மரியதாஸ் இன்னும் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படாத நிலையில் உள்ளார்.

  ஏற்கனவே, இலங்கை, தமிழக மீனவர்களை விடுவித்த நிலையில், இலங்கை மீனவரையும் அவரது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தம் கூறுகிறார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This