கொய்யா, மாதுளை தோப்புகளில் ஓடியாடும் அணிலைப் பார்த்து ரசித்திருப்பீர்கள். ஆனால் அந்த தோப்புகளின் உரிமையாளார்களுக்குத்தான் தெரியும், அணில்கள் எத்தனை நாசத்தை உண்டுபண்ணுகிறது என்று.
மரத்துக்கு மரம் தாவி குதிக்கும் அணில்களை அழிப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அவற்றின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த எளிய வழி இருக்கிறது. மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் ஒரு விவசாயி அணில்களின் தொல்லையை கட்டுப்படுத்த தோப்பில் சத்தம் எழுப்பும் மணிகளை வாங்கிக் கட்டியுள்ளார். அந்த சத்தத்தைக் கேட்டதும் அணில்கள் தெரித்து ஓடியுள்ளன. சிறுமணிகளை வாங்கிக் கட்டமுடியவில்லை எனில் சத்தம் எழுப்பக் கூடிய வேறு எந்தப் பொருளைக் கட்டினாலும் சரி, அணில் அந்தப் பக்கம் வராது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.