சென்னை அயனாவரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.
அடுக்குமாடி குடியிருப்பின் லிப்ட் ஆபரேட்டர்கள், எலெக்ட்ரீஷியன், பிளம்பர், தண்ணீர்கேன் போடுபவர் என 24 பேர் கொண்ட கும்பல் சிறுமியை பாலியல் வன்முறை செய்துள்ளனர். சிறுமிக்கு போதை ஊசி போட்டும், கத்தி முனையில் மிரட்டியும் அந்த கும்பல் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக அந்த சிறுமி சகோதரியிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அயனாவரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, 24 பேரை போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.