துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
ஒ.பன்னீர்செல்வம், அவரது மனைவி, வாரிசுகள் மற்றும் சகோதரர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்துள்ளதாகவும், தேனியில் பல இடங்களிலும், வெளிநாடுகளிலும், ஓ.பி.எஸ்சின் வாரிசுகள் முதலீடு செய்துள்ளார்கள் என்று திமுக எம்.பி., ஆர்எஸ் பாரதி லஞ்ச ஒழிப்பு துறையில் கடந்த மார்ச் 10ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், புகார் அளித்து 3 மாதங்களான நிலையில், எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என கேள்வி எழுப்பி, சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக் கூடாது என்று கூறி வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.