மேற்கு தொடர்ச்சி மழைகளில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் 3வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால்,தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுருளி அருவியிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.