எண்ணெய் வித்துகள் பயிர் பாதுகாப்பில் பாரம்பரிய தொழில் நுட்பங்கள்

Forums Communities Farmers எண்ணெய் வித்துகள் பயிர் பாதுகாப்பில் பாரம்பரிய தொழில் நுட்பங்கள்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #7823
  Inmathi Staff
  Moderator

  எண்ணெய் வித்துகள் பயிர் பாதுகாப்பில் பாரம்பரிய தொழில் நுட்பங்கள்

  நிலக்கடலை

  கடலையில் சிவப்பு கம்பளிப் புழுவைக் கட்டுப்படுத்த வயலைச் சுற்றி குழிபறித்து அதில் எருக்கம் இலைகளைப் பரப்பி இலைகள் மூழ்கும் அளவுக்கு நீர் நிரப்பிவிட்டால் கம்பளிப் புழுக்கள் குழியில் விழும் பொழுது நீரில் உள்ள நச்சுத் தன்மையால் அவை இறந்துவிடும்.

  கடலை விதைத்த உடன் பறவைகள் கொத்தித் தின்பதை தடுக்க சேனைக்கிழங்கு தோலினை வயலில் ஆங்காங்கே தூவும்பொழுது சேனைக்கிழங்கு தோல் பாம்பு போன்று தோற்றமளிப்பதால் பறவைகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். இவ்வாறு பறவைகளால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கலாம்.

  ஆமணக்கு

  ஒரு கிலோ பொறித்த சோளத்தை ஆமணக்கு பயிரிடப்பட்ட வயலினைச் சுற்றிச் தெளிப்பதால் பறவைகள் கவரப்படுகின்றன. இவ்வாறு கவரப்பட்ட பறவைகள் ஆமணக்கு அரைகொக்கி புழுக்களை உண்பதால் இப்புழுக்கள் கட்டுப் படுத்தப்படுகின்றன. மேலும், இரண்டு கிலோ வேப்பிலையை இரண்டு லிட்டர் நீரில் ஊறவைத்து வடித்த நீரை (500 மி.லி. / 15 லிட்டர் நீர்) நீருடன் கலந்து தெளிப்பதன் மூலமும் இதனை கட்டுப்படுத்தலாம்.

  தென்னை

  தென்னையில் காண்டாமிருக வண்டுகளைக் கட்டுப்படுத்த மர உச்சியில் மணல் மற்றும் கல் உப்பினைத் தூவலாம். இவை காண்டாமிருக வண்டுகளின் நடமாட்டத்தைக் குறைத்து அவற்றை கட்டுப்படுத்துகின்றன.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This