கடந்த ஒரு வாரமாக, ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசி வந்த நிலையில், மீன் பிடிக்க கடலுக்கு மீனவர்கள் செல்வதற்கு மீன் வளத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்து வந்தனர். இந் நிலையில், நேற்று கடலுக்கு செல்ல அனுமதி கோரிய மீனவர்களுக்கு, மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசும் என்ற வானிலை அறிக்கையை காரணம் காட்டி அனுமதி மறுத்தனர். இந்நிலையில், அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி, பாம்பன் மீனவர்கள் கடலுக்கு சென்று திரும்பினர். அவ்வாறு, பாம்பனின் தென்பகுதியை நோக்கி மீன் பிடிக்க சென்ற மீனவர்கள், கடலில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்த நாட்டுப் படகு ஒன்றையும் மீட்டு வந்தனர்.
இன்று தடையை மீறி கடலுக்கு சென்ற நிலையில், நாளை என்ன பிரச்சினை ஏற்படப் போகுதோ என்ற குழப்பத்தில் மீனவர்கள் இருப்பதாக பாம்பனிலிலிருந்து கெவிஸ்டன் கூறுகிறார்.