சென்னையில் எஸ்பிகே கட்டுமான குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வரிஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சென்னை உட்பட 30 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்பிகே நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையில், ரூ.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஜாய்ஸ் என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.