பல்கலை மானிய குழுவை கலைக்கக்கூடாது, அதற்கு பதில் புதிய அமைப்பை ஏற்படுத்தக்கூடாது என்று முதல்வர் பழனிச்சாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். தேசிய உயர்கல்வி ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்றும், உயர்கல்வி ஆணையம்அமைக்கப்பட்டால் பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி 100 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக குறையும் என்று தெரிவித்துக்கொண்டார். யுஜிசி எந்த புகாரும் இன்றி 1946 முதல் செயல்பட்டு வருகிறது, அதை கலைக்ககூடாது என்று கேட்டுக்கொண்டார்.