நிர்மலாதேவி வழக்கை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

Forums Inmathi News நிர்மலாதேவி வழக்கை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #7630
  Kalyanaraman M
  Keymaster

  பேராசிரியை நிர்மலாதேவி மீது ஆயிரத்து 160 பக்க குற்றப்பத்திரிகையை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர்.

  பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியலுக்கு உட்படுத்த முயற்சி செய்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக நிர்மலா தேவியின் குரல் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது.

  சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவி, முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய 3 பேரும் பலமுறை மாவட்ட உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சிபிசிஐடி தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

  இந்த நிலையில் நிர்மலா தேவி வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அதிகாரி முத்து ராமலிங்கர் இன்று விருதுநகர் 2-வது குற்றவியல் நீதிபதி திலகேஸ்வரியிடம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். 1,160 பக்கங்கள் அடங்கிய இந்த குற்றப்பத்திரிகையில் வழக்கு குறித்து முழுமையான விவரங்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன.

  மேலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவின் கீழ குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.  நிர்மலா தேவி வழக்கை வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைகிளை, விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This