ஒவ்வொரு பயிருக்கும் நம் முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பரிய தொழில்நுட்பத்தின் மூலம் பூச்சிகளையும் நோய்களையும் கட்டுப்படுத்த முடியும். அதன்மூலம் வேதி மருந்துகளுக்கு செலவு செய்யும் பணத்தை குறைக்க முடியும். அதைவிட பயிர்கள் ஆரோக்கியமாக வளரும். அந்தவகையில், தானிய பயிர்களில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பாரம்பரிய தொழில்நுட்பங்கள் குறித்து….
துவரையில் காய்த்துளைப்பானைக் கட்டுப்படுத்த மூன்று முதல் ஐந்து லிட்டர் மாட்டுக் கோமியத்தில் சமஅளவு மாட்டுச்சாணத்தை (4நாட்கள் நொதித்தலுக்கு உட்படுத்தியபின்) கரைத்து வடிகட்டி அதனுடன் 200 கிராம் சுண்ணாம்பைக் கலந்து அதை 50-80லிட்டர் நீர்த்த பின் தெளிக்கலாம்.
தட்டைப்பயறில் மஞ்சள் தேமல் நோயைக் கட்டுபடுத்த மோர் தெளிக்கலாம் (மோர் சிறந்த கடத்தி தடுப்பான் (barrier of vectors)). தட்டைப்பயறில் வரும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கவருவதற்காக வயலில் பாலித்தீன் விரிப்பான்களை விரித்து அதன்மேல் ஆமணக்கு எண்ணெய்யை தடவி வைக்கலாம்.
கொண்டைக் கடலையில் கொத்தமல்லி மற்றும் ஆளிவித்தை ஊடுபயிராக பயிரிடும் போது காய்த்துளைப்பானைக் கட்டுப்படுத்தலாம்.