சென்னையில் விற்பனையாகும் மீன்களில் பார்மலின் ரசாயனம் கலந்திருப்பது எங்கேயும் கண்டறியப்படவில்லை. மீன்களின் மாதிரியை ஆய்வு செய்ததில் பார்மலின் இருப்பது உறுதியாகவில்லை. மீன்களின் தேவை அதிகமாக இருக்கும் போது பார்மலினை எப்படி பயன்படுத்துவார்கள்? மீன்களை பதப்படுத்த ஐஸ்பெட்டிகள் போதுமான அளவுக்கு உள்ளதால் அதனை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. மீன்களில் பார்மலின் கலப்பு என்பது வீண்வதந்தி. எனவே பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை. வீண் வதந்தி பரப்பி, மீனவர்களின் வாழ்வாதாரத்தில் விளையாட வேண்டாம். சந்தேகம் இருந்தால், மீன்வளப்பல்கலைகழகத்தில் ஆய்வு செய்து கொள்ளலாம். மக்களுக்கு தரமான மீன் உணவு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.