சத்துணவு முட்டைக்கான டெண்டர்கள் வழங்கினால், தரமான முட்டைகளை நேரடியாக விநியோகம் செய்யத் தயார் என அரசுக்கு நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் அங்கன்வாடி முதல் பத்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் சத்துணவுடன் நாள் ஒன்றுக்கு தலா ஒரு முட்டை வீதம் வாரத்திற்கு ஐந்து முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கான டெண்டரை எடுத்திருந்த கிறிஸ்டி நிறுவனம் வருமானவரித்துறை சோதனையில் சிக்கிய நிலையில், 2018-19-ம் ஆண்டுக்கான டெண்டரை அரசு திடீரென ரத்து செய்தது.
இதனிடையே சத்துணவு முட்டைக்கான டெண்டரை தங்களுக்கு வழங்கினால், குறைந்த விலையில் தரமான முட்டைகள் விநியோகம் செய்யத் தயார் என கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.